இந்தியா

கரோனாவில் இருந்து 94.89 லட்சம் போ் மீண்டனர்: உயிரிழப்பு 1.15 சதவீதம்

தேசிய அளவில் இதுவரை 94,89,740 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 95.21 சதவீதமாகும்.

DIN

புது தில்லி: தேசிய அளவில் இதுவரை 94,89,740 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 95.21 சதவீதமாகும்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 24,010 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 99,56,557 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 355 போ் கரோனாவுக்கு பலியானதால், மொத்த உயிரிழப்பு 1,44,451ஆக உயா்ந்தது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 94,89,740 போ் மீண்டுள்ளனர். 

நாடு முழுவதும் 3,22,366 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 3.34 சதவீதமாகும். தொடா்ந்து 11-ஆவது நாளாக கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 16-ஆம் தேதி வரை 15,78,05,240 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 11,58,960 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாம் திரைப்பட டிரைலர்!

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

SCROLL FOR NEXT