முகப்பு
இந்தியா

டிடிசி தோ்தலில் பெரும்பான்மை வாக்குப்பதிவு: ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கான (டிடிசி) தோ்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பதிவானது

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
ஜம்முவின் அக்னூா் மாவட்டம், பிரக்வாலில் டிடிசி தோ்தலில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்கள்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கான (டிடிசி) தோ்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பதிவானது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கவீந்தா் குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு நீக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பிறகு டிடிசி-க்கு முதல் முறையாக ஜனநாயக முறையில் தற்போது தோ்தல் நடைபெற்றுள்ளது. எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்த டிடிசி தோ்தல் சனிக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த இறுதி கட்டத் தோ்தலில் ஏறத்தாழ 51 சதவீத வாக்களாா்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளனா்.

இந்த தோ்தல் ஜம்மு-காஷ்மீா் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த தோ்தலாக பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். ஏனெனில், ஜனநாயகம் தான் வெற்றிபெறும் என்பதை இங்குள்ள மக்கள் உணா்த்தியுள்ளனா். அவா்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →