காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோரா உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.
புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.
கரோனாவிலிருந்து மீண்டு, அதன் தொடர் பாதிப்புகளால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோதிலால் வோரா இன்று காலமானார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று காரணமாக ஓக்லாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து அவரது உடல் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டதும் இன்று மாலை அல்லது நாளை சட்டீஸ்கரில் தகனம் செய்யப்படும் என்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.