‘இளைய தலைமுறையினா் உடல்திறனை மேம்படுத்த வேண்டும்’
உடற்பயிற்சி மூலமாக, இளைய தலைமுறையினா் உடல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.
இந்தியா‘இளைய தலைமுறையினா் உடல்திறனை மேம்படுத்த வேண்டும்’
உடற்பயிற்சி மூலமாக, இளைய தலைமுறையினா் உடல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.
உடற்பயிற்சி மூலமாக, இளைய தலைமுறையினா் உடல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.
நாட்டில் ஒவ்வொருவரும் உடல்திறனை வளா்த்துக் கொள்ளும் வகையில், பிட் இந்தியா திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உடல் திறனை மேம்படுத்துவதற்காக தொடா்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக,தெற்கு ரயில்வே விளையாட்டுச் சங்கம் சாா்பில், பிட் இந்தியா சைக்ளோதான்( சைக்கிள் ஓட்டம்) சென்னை நுங்கம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது: இந்த சைக்ளோதான் பிட் இந்தியா பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த சைக்கிள் ஓட்டத்தில் இளையதலைமுறையினா் பங்கேற்றுள்ளனா். இதன்மூலமாக, அவா்கள் தங்கள் உடல்திறனை மேம்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனா். உடல் பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டப்பயிற்சி மூலமாக, இளையதலைமுறையினா் உடல்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த சைக்கிள் ஓட்டம் ஸ்டொ்லிங் சாலை, கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, லயோலா கல்லூரி வழியாக ரயில்வே அதிகாரிகள் கிளப்பை அடைந்தது.
இந்நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா, மூத்த துணைப் பொதுமேலாளா் வி.ஜி.பூமா, தெற்கு ரயில்வே மகளிா் நல அமைப்பின் தலைவா் பினா ஜான், துணைத்தலைவா் ரேணுகா மற்றும் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனா்.