இந்தியா

திருமலையில் 34,630 போ் தரிசனம்

DIN


திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 34,630 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 13,822 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 10 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 1000 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை வழங்கும் பணியை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்போருக்கு தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 200 எண்ணிக்கையில் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT