விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை: பினராயி விஜயன்
நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் 28ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதராகவும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் விவசாயிகள் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
நம் நாடு பல வரலாற்று போராட்டங்களை கொண்டுள்ளது. அவற்றில் மிகப் பெரிய போராட்டமாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை.
பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (என்.சி.எஃப்) சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதாக பாஜக கூறியது. அவ்வாறு கூறிய பாஜக தான் இப்போது நாட்டை ஆளுகிறது. ஆனால், தாங்கள் கூறியதை அமல்படுத்த முடியவில்லை.
தேசிய விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படும் இந்நாளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.