வேளாண் சட்டங்கள் எந்த வகையிலும் பலனளிக்காது: கேஜரிவால்
விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டங்கள் எந்த வகையிலும் பலனளிக்காது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டங்கள் எந்த வகையிலும் பலனளிக்காது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைப்பொருள்களை மண்டிகளுக்கு வெளியே விற்பனை செய்யும் நோக்கத்தில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்வதால் விவசாயிகளுக்கு பாதியளவு வருவாயே கிடைக்கும் என்றும் கூறினார்.
தில்லியில் இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, ''கடந்த நவம்பர் மாதம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அவசர அவசரமாக வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தற்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் கடந்த நான்கு வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி முழு ஆதரவு அளித்து வருகிறது.
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று பாஜக வலியுறுத்துகிறது. ஆனால் விவசாயிகளுக்கு அச்சட்டங்களால் என்ன பலன் கிடக்கிறது. சந்தைக்கு வெளியே எங்குவேண்டுமானாலும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யலாம் என்று சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு பாதி விலைக்கே உற்பத்தி பொருள்கள் விற்பனையாகின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்று கூறினார்.