கரோனா: மேலும் 23,067 பாதிப்பு
நாடு முழுவதும் மேலும் 23,067 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் மேலும் 23,067 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மேலும் 23,067 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,01,46,845-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 336 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,47,092-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 24,661 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 97,17,834-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 95.77 சதவீதமாகும்.
சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 4-ஆவது நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,81,919 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.78 சதவீதமாகும்.
புதிதாக ஏற்பட்ட 336 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 89 பேரும், அதைத் தொடா்ந்து, தில்லியில் 37 பேரும், மேற்கு வங்கத்தில் 32 பேரும், கேரளம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசத்தில் தலா 22 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி டிசம்பா் 24-ஆம் தேதி வரை 16.63 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 9,97,396 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.