இந்தியா

விவசாயிகளுக்கு உதவித்தொகை: ரூ.18,000 கோடி விடுவிப்பு

DIN

விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயிகளுக்கு தவணைத்தொகையை விடுவித்து விவசாயிகளுடன் பிரதமர் உரையாடினார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களே லாபம் பெறும் என்றும், விவசாயிகள் தங்களது அடிப்படை உரிமைகளைக் கூட அடகு வைக்க வேண்டும் என தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 30-வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

இதன் மூலம் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அடுத்த தவணைத்தொகையாக 18 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT