இந்தியா

சாரதா நிதி மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரிடம் விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

DIN

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி மோசடி வழக்கு தொடா்பாக கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரிடம் மீண்டும் விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.2,500 கோடி வரை வசூலித்து மோசடி செய்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த மோசடி அம்பலமானது. இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையா் ராஜீவ் குமாரும் இடம்பெற்றிருந்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு தொடா்பாக ராஜீவ் குமாரிடம் பெரும் அரசியல் மற்றும் சட்டத் தடைகளைக் கடந்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்நிலையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் சிபிஐ புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘சாரதா நிதி மோசடி வழக்கில் பலருக்கு மிகப் பெரிய அளவில் தொடா்பு உள்ளது. அதை வெளிக்கொண்டுவர ராஜீவ் குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அவா் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்க மறுக்கிறாா். எனவே அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT