முகப்பு
இந்தியா

மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணையதளம், கைபேசி செயலி: பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். 

Updated On : 31 டிசம்பர், 2020 at 8:56 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:45 PM

மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘‘நாட்டுக்கு சேவையாற்ற இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளது. ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்த, தனது சேவைகளை அதிகரிக்க ரயில்வே துறை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 
இந்த மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம், முன்பதிவு செய்வதில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கும். ‘‘இந்த இணையதளத்தை மேம்படுத்த ஐஆர்சிடிசி தொடர்ந்து பணியாற்றும். டிஜிட்டல் இந்தியா திட்டப்படி, இந்த இணையதளம் தரத்தில் எதற்கும் 
குறைந்தது இல்லை. இது பிரதமரின் தொலைநோக்கு என்று அவர் கூறினார். பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.