முகப்பு
இந்தியா

வழக்கை திரும்பப்பெறாததால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி மீது அமிலம் வீச்சு

குடும்பத் தகராறு காரணமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி மீது அமிலம் வீசிய உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:43 PM
பகிர்:

குடும்பத் தகராறு காரணமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி மீது அமிலம் வீசிய உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் எனுமிடத்தில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஜூன், 2019-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாபுகர் போலீஸார் நடத்திய விசாரணையில் தில்ஷத் என்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப்பெறுமாறு குற்றச்சாட்டுக்குள்ளானவரின் குடும்பத்தினர், சிறுமியின் பெற்றோரிடம் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால், அவரது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. 

இதையடுத்து பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் காலில் மற்றொரு உறவினர் ஞாயிற்றுக்கிழமை அமிலம் வீசியுள்ளார். மேலும் இதன் பிறகும் அவர்கள் வழக்கைத் திரும்பப்பெறவில்லை என்றால் அடுத்தமுறை சிறுமியின் முகத்தில் அமிலத்தை வீசுவதாகவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், சிறுமி மீது அமிலம் வீசி தலைமறைவாகியுள்ள நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →