முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

கேஜரிவால் ஒரு பயங்கரவாதி: பிரகாஷ் ஜாவடேகர்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்பதை நிரூபிக்க நிறைய ஆதாரம் இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

கேஜரிவால் ஒரு பயங்கரவாதி: பிரகாஷ் ஜாவடேகர்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்பதை நிரூபிக்க நிறைய ஆதாரம் இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:43 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்பதை நிரூபிக்க நிறைய ஆதாரம் இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் இன்று (திங்கள்கிழமை)செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,

"நான் என்ன பயங்கரவாதியா? என்று அரவிந்த் கேஜரிவால் சோகமான முகத்துடன் கேட்கிறார்? நீங்கள் (கேஜரிவால்) ஒரு பயங்கரவாதி என்பதை நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் உள்ளன. நான் ஒரு அராஜகவாதி என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். அராஜகவாதிக்கும், பயங்கரவாதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்றார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் அரவிந்த் கேஜரிவால் காலிஸ்தான் கமாண்டருக்குச் சொந்தமான இடத்தில் தங்கியிருந்த விவகாரம் குறித்தும் பேசிய பிரகாஷ் ஜாவடேகர்,

"அது தீவிரவாதியின் வீடு என்று உங்களுக்குத் தெரியும். தெரிந்தும் நீங்கள் அங்கேயே தங்கினீர்கள். இன்னும் வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்?" என்றார்.

முன்னதாக, அரவிந்த் கேஜரிவாலை பயங்கரவாதி என்று அழைத்த குற்றச்சாட்டுக்காக பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →