முகப்பு
இந்தியா

பணியில் இறக்கும் துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு: ஆம் ஆத்மி வாக்குறுதி

தரமான கல்வி, சுகாதாரம், சுத்தமான தண்ணீர் மற்றும் 24 மணிநேர மின்சாரம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:44 PM
பகிர்:

தரமான கல்வி, சுகாதாரம், சுத்தமான தண்ணீர் மற்றும் 24 மணிநேர மின்சாரம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தில்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் களத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டனர். 28 அம்சங்கள் அடங்கிய இந்த உத்தரவாத அட்டையை (கேரண்டி கார்டு) தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளியிட்டார்.

இந்த தேர்தல் அறிக்கையில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம், 10 லட்சம் மூத்த குடிமக்களுக்கு இலவச புனித யாத்திரை மற்றும் பணியில் இருக்கும்போது இறக்கும் துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னோட்ட திட்டமாக, 24 மணி நேரம் சந்தைகள் செயல்பட அனுமதி வழங்குவதும் இந்த வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது.

தில்லியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் வளமான நிலையை அடைய வைப்பது கட்சியின் கனவு என்று கூறியுள்ள ஆம் ஆத்மி, தில்லி முழு மாநில அந்தஸ்தைப் பெறுவதை நோக்கி தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால்,

"முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்க வேண்டும் என தில்லி மக்கள் விரும்புகின்றனர். அவருடன் விவாதிக்க நான் தயார்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →