இந்தியா

தனியாக வசிக்கும் முதியவர்களை பராமரிக்க மத்திய அரசு திட்டம்: மத்திய இணை அமைச்சர்

IANS


புது தில்லி: வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களை பராமரிக்கும் திட்டத்தை மத்திய அரசு  அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் ஹுஸைன் தல்வாய் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சமூக நீதித்துறை மற்றும் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லாட் வாய்மொழியாக அளித்த பதிலில், முதியவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டம், அரசு சாரா அமைப்பின் உதவியோடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. அதன் கீழ், வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு அடிப்படையான வசதிகள் மற்றும் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தேவைகள் அரசு சாரா அமைப்பு மூலம் நிறைவேற்றிக் கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT