இந்தியா

கரோனா வைரஸ்: மத்திய அரசு உதவித்தொகை வழங்க கேரள எம்.பி. வேண்டுகோள்

DIN

கேரளத்தில் கரோனா வைரஸ் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு சாா்பில் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று, மக்களவையில் கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் கோரிக்கை விடுத்தாா்.

சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 3 கேரள மாணவா்கள் சொந்த ஊா் திரும்பிய நிலையில், அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. திருச்சூா், ஆலப்புழை, காசா்கோடு மாவட்டங்களில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் 2,321 போ் அவா்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். வெவ்வேறு மருத்துவமனைகளில் 100 போ் தனி வாா்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்பு சூழலை, கேரள அரசு சமீபத்தில் மாநில பேரிடராக அறிவித்தது.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் கேரள காங்கிரஸ் உறுப்பினா் ரம்யா ஹரிதாஸ் புதன்கிழமை பேசியதாவது: கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு முன்னெடுத்து வந்தாலும், அதற்கு அதிக கண்காணிப்பும், உதவித்தொகையும் தேவைப்படுகிறது. இதற்கான சிறப்பு நிதி தொகுப்பை அறிவிப்பதோடு, உதவி புரிவதற்கான குழுவையும் மத்திய அரசு கேரளத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT