இந்தியா

உ.பி. தொழிற்சாலையில் அமில வாயு கசிந்ததில் மூச்சுத்திணறி 7 பேர் பலி

DIN

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமில தொழிற்சாலையில் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதனால் மூச்சுத்திணறி ஏழு பேர் உயிரிழந்தனர். 

உத்தரப்பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் ஜலல்பூர் என்ற பகுதியில் உள்ள அமில தொழிற்சாலையில் திடீரென எரிவாயு குழாயில் இருந்து வாயு கசிந்ததில் மூச்சுத் திணறி ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், இதில் மூன்று குழந்தைகள், ஒரு பெண் அடங்குவர்.

வியாழக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

மேலும், எரிவாயு குழாய் கசிவினை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் எரிவாயு கசிந்ததற்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT