இந்தியா

இடஒதுக்கீடு தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

தினமணி

இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீரப்பை எதிா்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின் அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பெங்களூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை, அரசியல் சாசன அமா்வு விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டத் துறையிடம் கலந்தாலோசித்து விட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 16(4)(பி) அல்லது(சி) பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கவும், இடஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டுவரவும் பாஜக முயன்று வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்புவோம் என்றாா்.

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக் கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பில் உடன்பாடில்லை; மத்திய பாஜக அரசின் ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT