முகப்பு
இந்தியா

துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர்: பிரகாஷ் ராஜ் கருத்து

துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் என தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
பகிர்:

துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் என தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி சுமார் 58 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக நடிகர் பிரகாஷ் ராஜ், தேர்தல் முடிவுகள் மூலமாக துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை தில்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →