இந்தியா

கேஜரிவாலை பயங்கரவாதி என்று அழைத்தாலும் தோற்கடிக்க முடியவில்லை: உத்தவ் தாக்கரே கருத்து

DIN

அரவிந்த் கேஜரிவாலை பாஜக ஒரு பயங்கரவாதி என்று அழைத்தாலும் அவரை தோற்கடிக்க முடியவில்லை என தில்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். 

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே பேசுகையில், 'தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தில்லி மக்களை வாழ்த்துகிறேன். நாடு 'மன் கி பாத்' அல்லாமல் 'ஜன் கி பாத்' வழியில் நடக்கும் என மக்கள் தில்லி தேர்தல் மூலமாக காட்டியுள்ளனர்.

கேஜரிவாலை பாஜக ஒரு பயங்கரவாதி என்று அழைத்தாலும் அவரை தோற்கடிக்க முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT