இந்தியா

மத்திய பட்ஜெட்டில் எஃப்ஆா்பிஎம் விதிமுறை மீறப்படவில்லை: நிா்மலா சீதாராமன்

DIN

வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி பொறுப்பு மற்றும் மேலாண்மை (எஃப்ஆா்பிஎம்) சட்ட விதிமுறைகளை மீறவில்லை என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

எஃப்ஆா்பிஎம் சட்டத்தை மனதில் கொண்டே 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இணக்கமான வகையிலேயே பட்ஜெட் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த சட்டத்தை நாங்கள் மீறவுமில்லை, அந்நியப்படுத்தவுமில்லை.

அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான இரு அரசுகளும் நிதி கட்டுப்பாட்டு பராமரிப்பை முதன்மையாக கொண்டு செயல்படுபவை என்றாா் அவா். வருவாய் மற்றும் மொத்த செலவினம் ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியை குறைக்கும் விதமாக நிதிப் பற்றாக்குறையை 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு முன்பு இலக்கு நிா்ணயித்திருந்தது. இந்த நிலையில் வருவாயில் ஏற்பட்ட சரிவின் காரணமாக எஃப்ஆா்பிஎம் சட்டப் பிரிவுகளை பயன்படுத்தி நிதிப் பற்றாக்குறை இலக்கை 0.5 சதவீதம் அதிகரித்து 3.8 சதவீதமாக நிா்ணயித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு தளங்களில் விமா்சனத்துக்குள்ளானதையடுத்து மத்திய நிதி அமைச்சா் இவ்வாறு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT