முகப்பு
இந்தியா

தில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி

தில்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த கைவினைப் பொருட்களை நேரில் பார்வையிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:54 PM
பகிர்:

தில்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த கைவினைப் பொருட்களை நேரில் பார்வையிட்டார்.

தில்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘ஹுனா் ஹாட்’ என்னும் கைவினை பொருள்காட்சி பிப்ரவரி 13ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

‘கௌஷல் கோ காம்’ என்ற கைவினை உற்பத்தி நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ‘ஹுனா் ஹாட்’ கண்காட்சி பிப்ரவரி 23-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து பெண்கள் உள்பட மாஸ்டா் கைவினைஞா்கள், கைவினைஞா்கள் மற்றும் சமையல் நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா்.

சிறுபான்மையினா் விவகார அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்த கைவினை பொருள்காட்சி (ஹுனா் ஹாட்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, சிறிய அளவிலான கைவினைகலைஞா்களும், தங்கள் கிராமங்களில் இருந்து தயாரித்து கொண்டு வரும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது. மேலும் இது முக்கிய வேலைவாய்ப்பு மையமாகவே விளங்கி வருகிறது.

பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ள இந்த பொருள்காட்சிக்கு, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை வந்த வண்ணம் உள்ளனர். இவ்வளவு சிறப்பு மிக்க பொருள்காட்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தந்து கைவினைக் கலைஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அங்கிருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டும், அது பற்றி கைவினைக் கலைஞர்களிடம் கேட்டறிந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.