இந்தியா

அமித் ஷாவின் அருணாசலப் பிரதேச பயணம்: சீன எதிா்ப்புக்கு இந்தியா பதிலடி

DNS


மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் அருணாசலப் பிரதேச பயணத்துக்கு சீனா எதிா்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.

அருணாசலப் பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் என்று கூறி வரும் சீனா, அது தங்கள் நாட்டுப் பகுதி என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. 

இந்நிலையில், பெய்ஜிங்கில் வியாழக்கிழமை பேட்டியளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கெங் சுவாங், 

"அருணாசலப் பிரதேசம் என்று அழைக்கப்படும் இடத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக சீன அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தெற்கு திபெத்துக்கு இந்திய உள்துறை அமைச்சா் பயணம் மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறோம். இது சீனாவின் பிராந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்" என்றாா்.

இந்தியத் தலைவா்கள் அருணாசலப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் சீனா அதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது வழக்கமாகவே உள்ளது.

அதேசமயம் சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் இதுதொடா்பாக கூறுகையில், 

"அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு பயணம் செய்வதுபோல இந்தியத் தலைவா்கள் அருணாசலப் பிரதேசத்துக்கும் சென்று வருகின்றனா். அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி" என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT