முகப்பு
இந்தியா

சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எண்ணம் இல்லை: அமித் ஷா உறுதி

வட இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை, அது பற்றி தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:55 PM
பகிர்:


இட்டாநகர்: வட இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை, அது பற்றி தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், வட இந்திய மாநிலங்கள் அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் வெளியே வர வேண்டும் என்பதைத்தான் மோடி அரசு விரும்புகிறது. உதாரணமாக, பயங்கரவாதம், மாநில எல்லைப் பகுதிகளில் இருக்கும் பிரச்னைகள் போன்றவற்றைக் களையவே மோடி அரசு விரும்புகிறது.

2014 வரை, வட இந்திய மாநிலங்கள், இந்தியாவுடன் வெறும் புவியியல் அமைப்பு ரீதியாக மட்டுமே இணைந்திருந்தன. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகுதான், வட இந்திய மாநிலங்கள் இந்தியாவுடன் ஒன்றிணைக்கப்பட்டன.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் என ஒவ்வொரு கலாசார சிறப்பம்சம் இருக்கும். அதன்படி, சட்டப்பிரிவு 371ன் கீழ் பல்வேறு மாநிலங்களும் தனித்தனியாக சிறப்பு அந்தஸ்துகளை பெறுகின்றன. இது, அந்தந்த மாநிலங்களின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. எனவே, சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று அமித் ஷா கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.