இந்தியா

தமிழகம் உள்பட காலியாகும் இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN

2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மார்ச் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 16ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு பணி நடைபெறும். 18ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள். 

மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் மாநிலங்களவைத் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 5 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், விஜிலா சந்தியானந்த் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 3 உறுப்பினர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT