15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை பகுதியில் மஹாபெ எனுமிடத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்று வரும் பள்ளி மாணவிகள் 15 பேருக்கு கணினி வகுப்பின் போது கணினி ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கணினி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் மார்ச் 2ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.