இந்தியா

பூரி ஜெகன்நாத் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாத் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். 

DIN

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாத் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். 

ஒடிசா மாநிலம், பூரி நகரில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற ஜெகன்நாத் கோயில் உள்ளது. இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பூரி ஜெகன்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 

சுமார் 30 நிமிடங்கள் கோயிலில் இருந்து அவர் சாமி தரிசனம் செய்தார். அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி, பிரகலாத் சிங் படேல், பாஜக எம்பி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். 

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அமித் ஷா, ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாத் கோயிலுக்கு சென்றுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT