இந்தியா

பிரதமர் மோடி கொல்கத்தா பயணம்: பாரம்பரிய கட்டடங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

DIN


புது தில்லி: கொல்கத்தாவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜனவரி 11, 12ம் தேதி செல்லவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு புதுப்பிக்கப்பட்ட 4 பாரம்பரிய கட்டடங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பாரம்பரிய கட்டடங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தல்

கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டடம், பெல்வேடியர் இல்லம், மெட்கால்ஃப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவரங்கம் ஆகிய 4 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மத்திய கலாச்சாரத் துறை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 4 காட்சிக் கூடங்களை புதுப்பித்து, புனரமைத்திருப்பதோடு, பழைய கலைக்கூடங்களை சீரமைத்திருப்பதுடன் புதிய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய கலாச்சாரத் துறை, நாட்டின் பெருநகரங்களில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களைச் சுற்றி கலாச்சார மையங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடக்கமாக, கொல்கத்தா, தில்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் உள்ள கட்டடங்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் 2020 ஜனவரி 11 மற்றும் 12-ந் தேதிகளில் கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். கொல்கத்தா துறைமுக சபையில் பணியாற்றி ஏற்கனவே ஓய்வு பெற்ற மற்றும் தற்போதைய ஊழியர்களின் ஓய்வூதிய நிதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான கடைசித் தவணையாக, ரூ.501 கோடிக்கான காசோலையை பிரதமர் வழங்க உள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக, கொல்கத்தா துறைமுக சபையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மிக மூத்த ஓய்வூதியதாரர்களான நாகினா பகத் மற்றும் நரேஷ் சந்திர சக்கரவர்த்தி (முறையே 105 மற்றும் 100 வயது) ஆகியோரை பிரதமர் கவுரவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, துறைமுக கீதத்தையும் பிரதமர் வெளியிட உள்ளார்.

150-வது ஆண்டு விழா நினைவாக பழைய துறைமுக படகுத் துறையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டு ஒன்றையும் மோடி திறந்து வைக்க உள்ளார்.

நேதாஜி சுபாஷ் உலர் துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொச்சின் கொல்கத்தா கப்பல் பழுதுபார்ப்புப் பிரிவின் மேம்படுத்தப்பட்ட கப்பல் பழுது நீக்கும் வசதியையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

சரக்குப் போக்குவரத்தை எளிமையாக்கி, துறைமுகப் பணிகளின் நேரத்தைக் குறைக்கும் வகையில், கொல்கத்தா துறைமுக சபையின் கொல்கத்தா கப்பல் துறையில் மேம்படுத்தப்பட்ட ரயில்வே கட்டமைப்பு வசதியை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நரேந்திர மோடி, முழுமையான மண் தோண்டும் கருவியையும் தொடங்கி வைக்கிறார்.

கொல்கத்தா துறைமுகத்தின் ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் உள்ள கப்பல் நிறுத்துமிடம் எண்.3-ஐ இயந்திரமயமாக்கும் பணிகளையும், ஆற்று முகப்பு மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். கொல்கத்தா துறைமுகசபை, பூர்வாஞ்சல் கல்யாண் ஆசிரமம், கோ சபா, அகில பாரதீய வனவாசி கல்யாண் ஆசிரமத்துடன் இணை அமைப்பான சுந்தரவன அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து நடத்தும், சுந்தரவனப் பகுதியை சேர்ந்த 200 பழங்குடியின மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் பிரித்திலதா சத்ரி ஆவாஸ் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT