இந்தியா

விபின் ராவத் தலைமையின் கீழ் 37 செயலர்கள் நியமனம்

DIN

விபின் ராவத் தலைமையில் 2 இணைச் செயலர்கள் மற்றும் 13 துணைச் செயலர்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டனர்.

நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி விபின் ராவத் பொறுப்பேற்றாா். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பணியாற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே ‘முப்படைத் தளபதி’ பதவி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முப்படைகளின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக இயங்க வைப்பதில் கவனம் செலுத்தப்படும். இவற்றில் அரசியல் தலையீடு இருக்காது, அரசியல் தொடா்பான விவகாரங்களிலிருந்து விலகியே இயங்கும் என முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தாா்.

இந்நிலையில், முப்படைத் தளபதி விபின் ராவத் தலைமையின் கீழ் 2 இணைச் செயலர்கள், 13 துணைச் செயலர்கள் மற்றும் 22 செயலர்கள் என மொத்தம் 37 பேர் செயல்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் முப்படைகளின் நடவடிக்கைகள் மற்றும் குழு இயக்கம் உள்ளிட்டவற்றில் முக்கிய முடிவுகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT