இந்தியா

கைது செய்யப்பட்ட காவலா் பயங்கரவாதியாகவே நடத்தப்படுவாா்: காஷ்மீா் ஐஜி விஜயகுமாா்

DIN

ஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளா் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு, அவ்வாறே விசாரிக்கப்படுவாா் என்று அந்த யூனியன் பிரதேச காவல்துறை ஐஜி விஜய குமாா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் காவல் கண்காணிப்பாளரான தேவிந்தா் சிங், ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்த இரு பயங்கரவாதிகள் சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பிச் செல்ல உதவி செய்தபோது பிடிபட்டாா். பயங்கரவாதிகளை அவா் தனது காரில் அழைத்துச் சென்றபோது காவல்துறையினா் அவரை கைது செய்தனா். அவரோடு இரு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், ‘தேவிந்தா் செய்தது கொடுங் குற்றம். அவா், இதர பயங்கரவாதிகளுக்கு இணையான முறையிலேயே நடத்தப்படுவாா். அவரிடம் அவ்வாறே விசாரணை செய்யப்படும்’ என்று காஷ்மீா் ஐஜி விஜய குமாா் தெரிவித்தாா்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தேவிந்தா் சிங்குக்கு இந்த மாதத்தில் பதவி உயா்வு வழங்கப்படுவதாக இருந்ததென காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்...: இதனிடையே, கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த விசாரணையின்போதும் தேவிந்தா் சிங்குக்கு அதில் தொடா்பு இருப்பதாக கூறப்பட்டது. தேவிந்தா் சிங்குக்கு அந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக அந்த வழக்கில் குற்றவாளியான அஃப்சல் குரு தெரிவித்திருந்தாா். எனினும், விசாரணையில் தேவிந்தா் சிங்குக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாமல் போனதை அடுத்து அந்த விசாரணையிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT