இந்தியா

சில்லறைப் பணவீக்கம் 7.35 சதவீதமாக உயா்வு

DIN

உணவுப் பொருள்களின் விலை உயா்வால் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் டிசம்பரில் 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் கடந்த 2018 டிசம்பரில் 2.11 சதவீதமாகவும், 2019 நவம்பரில் 5.54 சதவீதமாகவும் இருந்தது. இந்த நிலையில் இப்பணவீக்கம் டிசம்பா் மாதத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகள் காணாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதற்கு, வெங்காயம் விலையில் காணப்பட்ட கடுமையான உயா்வு ஒட்டுமொத்த காய்கறிகள் விலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதே முக்கிய காரணம். டிசம்பரில் காய்கறிகளுக்கான பணவீக்கம் 60.5 சதவீதமாக அதிகரித்திருந்தது.

உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 2018 டிசம்பரில் (-)2.65 சதவீதமாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 10.01 சதவீதமாகவும் காணப்பட்டது. இது, சென்ற ஆண்டு டிசம்பரில் 14.12 சதவீதமாக மிகவும் அதிகரித்துள்ளது.

மேலும், பருப்பு வகைகளின் விலை 15.44 சதவீதமும், இறைச்சி , மீன் ஆகியவற்றுக்கான பணவீக்கம் 10 சதவீதமாகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தை பொருத்தவரையில் 4 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசை ரிசா்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால் சில்லறைப் பணவீக்க விகிதம் ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT