இந்தியா

குடிபோதையில் போலீஸாரைத் தாக்கிய நபர்கள்: இருவர் கைது

DIN

தெற்கு கோவாவின் கன்கோலிம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குடிபோதையில் ஏழு நபர்கள் மூன்று போலீஸாரை தாக்கினர். 

காவல்துறை கண்காணிப்பாளர் (தெற்கு கோவா) அரவிந்த் கவாஸ் இது குறித்துக் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரை கைது செய்துவிட்டோம், மேலும் 5 நபர்கள் தப்பியோடிவிட்டனர். அருகிலுள்ள வனப்பகுதிகளில்தான் இருப்பார்கள். விரைவில் பிடித்துவிடுவோம்.

"இந்த நபர்கள் பார்ட்டியில் அதிகளவில் மது அருந்திக்கொண்டிருந்தபோது, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் குறித்த புகார் வந்தது. அப்போது பணியில் இருந்த போலீஸார் அந்த இடத்தை அடைந்து அவர்களை உடனடியாக வெளியேறும்படி கேட்டபோது, அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். அவர்கள் போலீஸ் வேன்களில் ஏற்ற அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டபோது அதற்கு எதிராக போலீஸாரையே தாக்கத் தொடங்கினர், "கவாஸ் கூறினார்.

காயமடைந்த மூன்று காவலர்களை உள்ளூர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர், முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினர்’  என்றும் கவாஸ் கூறினார்.

"மற்றபடி வேறு எந்த போலீஸாரும் பலத்த காயமடையவில்லை" என்று கவாஸ் கூறினார். காணாமல் போன குற்றவாளிகளைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT