9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவைப் போல இந்தியா பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: விபின் ராவத்
9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எப்படி செயல்பட்டதோ அவ்வாறு நாம் செயல்பட்டால்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி விபின்
9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எப்படி செயல்பட்டதோ அவ்வாறு நாம் செயல்பட்டால்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி கூறியிருப்பதாவது, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடர வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளும், அதற்குண்டான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும்.
9/11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எவ்வாறு செயல்பட்டதோ அதுபோல இந்தியா செயல்பட்டால்தான் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வரப் போகிறது என்று நாம் நினைத்தால் அது தவறு. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்றும் விபின் ராவத் கூறினார்.
நாட்டின் முதல் ‘முப்படைத் தளபதி’யாக விபின் ராவத்தை மத்திய அரசு நியமித்தது. ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் ஓய்வுபெற இருந்த நிலையில், அவர் முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.