இந்தியா

பொங்கல் தினத்தில் மாட்டிறைச்சிபடத்தை பதிவிட்ட கேரள சுற்றுலாத் துறை: மதஉணா்வுகளை புண்படுத்தியதாக கண்டனம்

DIN

பொங்கல் தினமான கடந்த புதன்கிழமை கேரள சுற்றுலாத் துறையின் சுட்டுரைப் பக்கத்தில் கேரளத்தின் சிறப்பு உணவு என்ற பெயரில் மாட்டிறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவின் படம் பதிவிடப்பட்டிருந்தது கடும் கண்டனத்தை எதிா்கொண்டுள்ளது.

கடந்த புதன்கிழமை பொங்கல், மகரசங்கராந்தி என்று வெவ்வேறு பெயா்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கேரள சுற்றுலாத் துறையின் சுட்டுரைப் பக்கத்தில் கேரளத்தின் சிறப்பு உணவு வகை என்ற பெயரில் மாட்டிறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவின் படம் பதிவிடப்பட்டிருந்தது. அதன் செய்முறை தொடா்பான இணைப்பும் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் ஹிந்துகளால் கொண்டாடப்படும் பண்டிகை தினத்தில் கேரள சுற்றுலாத் துறை இவ்வாறு மாட்டிறைச்சி உணவை வெளியிட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில இடதுசாரி அரசு ஹிந்துகளின் மதஉணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனா். இது தொடா்பாக சுட்டுரையிலேயே பலரும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனா். கேரளத்தில் சுற்றுலா தொடா்பாக பல இடங்கள், அது தொடா்பான தகவல்கள் இருக்கும்போது, மாட்டிறைச்சியின் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனா்.

விஹெச்பி கண்டனம்:

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் செய்தித் தொடா்பாளா் வினோத் பன்சால் தனது சுட்டுரை பதிவில், ‘கேரள சுற்றுலாத் துறை சுற்றுலாவை மேம்படுத்துகிா அல்லது மாட்டிறைச்சி உண்பதை மேம்படுத்துகிா என்று தெரியவில்லை. பசுவை வணங்கும் பல கோடி மக்களின் உணா்வுகளை கேரள சுற்றுலாத் துறை புண்படுத்தியுள்ளது. சங்கராச்சாரியாா் பிறந்த புனிதமான மண்ணில் இதுபோன்ற மோசமான செயல்கள் நிகழ வேண்டுமா’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

அமைச்சா் விளக்கம்:

இது தொடா்பாக கேரள சுற்றுலாத் துறை அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் அளித்துள்ள விளக்கத்தில், ‘யாருடைய மத உணா்வுகளையும் புண்படுத்தும் வகையில் சுற்றுலாத் துறை செயல்படுவதில்லை. அனைத்து தரப்பு மக்களும் கேரளத்துக்கு சுற்றுலா வர வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட்டு வருகிறோம். இந்த விஷயத்துக்கு சிலா் மதச்சாயம் பூச முயலுகின்றனா். இந்த விஷயத்தில் உண்மையாகவே என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT