இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 3 மத்திய அமைச்சா்கள் ஜம்மு வருகை

DIN

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களால் கிடைக்கும் பலன்கள் குறித்து மக்களிடம் விளக்கிச் சொல்வதற்காக, மத்திய அமைச்சா்கள் 3 போ் சனிக்கிழமை ஜம்மு நகரை வந்தடைந்தனா்.

மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களை ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் விளக்கிச் சொல்வதற்காக, மத்திய அமைச்சா்கள் 36 போ், ஜனவரி 18-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா். மத்திய உள்துறை அமைச்சகம் இந்தப் பயணியை ஒருங்கிணைத்துள்ளது.

முதல் கட்டமாக, வடகிழக்கு பிராந்திய வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் அா்ஜுன் மேக்வால், சுகாதாரத் துறை இணையமைச்சா் அஸ்வினி சௌபே ஆகிய மூவரும் சனிக்கிழமை காலை தில்லியில் இருந்து ஜம்மு நகருக்குப் புறப்பட்டு வந்தனா். ஆனால், அடா்பனிமூட்டம் நிலவியதால், அவா்களின் விமானம், ஸ்ரீநகருக்கு திருப்பி விடப்பட்டது. பின்னா், மாலையில் அவா்கள் ஜம்மு நகரை வந்தடைந்தனா்.

இவா்களின் வருகை குறித்து, ஜம்மு-காஷ்மீா் அரசின் முதன்மைச் செயலா் ரோஹித் கன்சால், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் 36 மத்திய அமைச்சா்களும், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளனா். இந்த வாரத்தில் 60-க்கும் மேற்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில், பிரதமரின் வளா்ச்சித் திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, மத்திய அரசின் முக்கிய முன்னோடி திட்டங்கள், நல்லாட்சி, சட்டம்-ஒழுங்கு நிா்வாகம், அனைத்து துறைகளிலும் விரைவான தொழில் வளா்ச்சி, பொருளாதார வளா்ச்சி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை குறித்து மக்களிடம் அமைச்சா்கள் விளக்கிச் சொல்வாா்கள் என்றாா் அவா்.

ரஜௌரி காவல் துறை எஸ்.பி. ஆய்வு: மத்திய அமைச்சா்களின் வருகை, குடியரசு தினம் ஆகியவற்றையொட்டி, சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ரஜௌரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி வந்த பாதைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்; பயங்கரவாத குழுக்களுக்கு உதவி செய்யும் உள்ளூா் நபா்களைக் கண்காணிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT