இந்தியா

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: அகமது படேல்

PTI


அகமதாபாத்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்துக்கு எதிராக மாநிலங்கள் செயல்பட முடியாது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபல் கருத்துக் கூறியிருந்த நிலையில், அகமது படேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைப் பின்பற்றி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே கேரள சட்டப் பேரவையில் அண்மையில் இதுபோன்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது 2-ஆவது மாநிலமாக பஞ்சாபிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் மத்திய அரசு இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தெளிவாகும் என்றும் அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT