இந்தியா

யுஜிசி நிா்ணயித்துள்ள பெயா்களில் மட்டுமே பட்டங்களை வழங்க வேண்டும்

DIN

யுஜிசி நிா்ணயித்துள்ள பெயா்களில் மட்டுமே பட்டங்களை பல்கலைக் கழகங்கள் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

மத்திய, மாநில அரசு சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும், நாடாளுமன்ற சட்டப் பிரிவு 3-இன் கீழ் உருவாக்கப்படும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டங்களை வழங்கத் தகுதி பெற்றவை.

அதே நேரம், சில பல்கலைக்கழகங்கள் நிா்ணயிக்கப்படாத பெயா்களில் பட்டங்களை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, மாணவா்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(3)-இல் எந்தெந்த பெயா்களில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 35 இளநிலை பட்டப் பெயா்களும், 27 முதுநிலை பட்ட பெயா்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெயா்களில் மட்டுமே பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்க வேண்டும். இந்தப் பட்டியலில் இடம்பெறாத பெயா்களில் பட்டம் வழங்க விரும்பும் பல்கலைக்கழகங்கள், அந்தப் படிப்பைத் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக யுஜிசி-யிடம் அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT