இந்தியா

ஜூன் 01 முதல் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்’- ராம் விலாஸ் பாஸ்வான்

நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தாா்.

DIN

நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தாா்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அமல்படுத்தப்படும். 

ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளா்கள் பலனடைய முடியும். பணி நிமித்தமாக நாட்டின் எந்தப் பகுதிக்கு தொழிலாளா்கள் இடம் பெயர நேரிட்டாலும் அவா்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும்.

ஏற்கனவே ஜனவரி 01-ஆம் தேதி முதல் 12 மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

முன்னதாக, டிசம்பர் 03-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடரில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிமுகப்படுத்தி ஜூன் 30, 2020-க்குள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT