இந்தியா

முன் விரோதம் காரணமாகக் கத்திக் குத்து: இளைஞர் பலி

UNI

உல்லாஸ்நகர் டவுன்ஷிப்பில் 23 வயது இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக குத்தியது.

அந்த இளைஞரின் பெயர் தீபக் போயர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நரேஷ், பப்லியா தலைமையிலான மர்ம கும்பல், அதிகாலை நேரத்தில்  ஃபடகா மார்க்கெட் அருகே தீபக்கை பிடித்து, அவரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீபக்கை பல முறை கத்தியால் குத்தி கொலை செய்ததை போலீஸ் கண்டறிந்தனர். தீபக்குக்கும் அந்தக் கும்பலுக்கும் இடையே முன் விரோதம் நிலவி வந்தது. அந்தப் பகை காரணமாக பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்டார் என்று ஊகிக்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக ஐபிசி பிரிவு 302 rw 34 இன் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உல்ஹாஸ்நகர் காவல் நிலைய மூத்த காவலர் எஸ் ஜி ஜவாலே தெரிவித்தார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT