இந்தியா

அலிகாரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் உள்பட 150 பேர் மீது வழக்குப்பதிவு

DIN


குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று உத்தரப் பிரதேசத்தில் ஷாஜமால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார்  வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT