இந்தியா

எனது தொலைப்பேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு

DIN

தனது தொலைப்பேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுவதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த அக்டோபா் மாதம் தோ்தல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பின் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. 

இந்நிலையில் தனது தொலைப்பேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் பாஜகவின் மூத்த அமைச்சர் ஒருவர் தனக்கு இதனை தெரிவித்ததாகவும் சஞ்சய் ரௌத் டிவிட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் தான் பால்சாகேப் தாக்கரேவின் சீடர் என்றும் திரைக்குப் பின்னால் தான் எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லை என்றும் ரஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனை தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய சஞ்சய் ரௌத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT