இந்தியா

தில்லியில் 3 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி

சீனாவிலிருந்து தில்லி திருப்பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்படுவதால்

IANS

சீனாவிலிருந்து தில்லி திருப்பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவிலிருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், சீனாவிலிருந்து வருபவர்களில் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் கூடுதல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களுக்கு காய்ச்சல், ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், சீனாவிலிருந்து அண்மையில் தில்லி திரும்பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதால், அவர்கள் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT