முகப்பு
இந்தியா

அனுராக்குக்கு 3 நாள் தடை, பர்வேஷ் குமாருக்கு 4 நாள் தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பாஜக மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பர்வேஷ் குமார் வர்மா ஆகியோர் தில்லியில் பிரசாரம் மேற்கொள்ள முறையே 3 மற்றும் 4 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள

இந்தியா

அனுராக்குக்கு 3 நாள் தடை, பர்வேஷ் குமாருக்கு 4 நாள் தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பாஜக மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பர்வேஷ் குமார் வர்மா ஆகியோர் தில்லியில் பிரசாரம் மேற்கொள்ள முறையே 3 மற்றும் 4 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:40 PM
பகிர்:

பாஜக மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பர்வேஷ் குமார் வர்மா ஆகியோர் தில்லியில் பிரசாரம் மேற்கொள்ள முறையே 3 மற்றும் 4 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லி தேர்தல் பிரசாரத்தின் போது, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது தொடர்பாக பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து அனுராக் தாக்கூர் மற்றும் கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோரின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், தில்லியில் பிரசாரம் மேற்கொள்ள அனுராக் தாக்கூருக்கு 3 நாள்களும், பர்வேஷ் குமார் வர்மாவுக்கு 4 நாள்களும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி தில்லி தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது, ​​பாஜக தலைவரும், மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூா், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டித்துப் பேசினார். அப்போது, கூட்டத்தினரைப் பார்த்து, ‘துரோகிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் பர்வேஷ் வர்மா கடந்த 28-ஆம் தேதி ஜனக்புரி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது போல, சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தில்லிவாசிகளின் வீடுகளில் நுழைந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யக்கூடும்’ என்று எச்சரித்திருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →