இந்தியா

கர்நாடகம்: கரோனாவுக்கு பலியான பலரின் உடல்கள் ஒரே சவக்குழியில் புதைப்பு

DIN


கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில், ஒரே சவரக்குழியில், கரோனா பாதித்து பலியான பலரின் உடல்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் புதைக்கும் சம்பவம் விடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த விடியோவில், சுகாதாரத் துறை ஊழியர்கள் பாதுகாப்புக் கவசம் அணிந்தபடி, அருகில் நிற்கும் வாகனத்தில் இருந்து கருப்பு கவரில் உடல்களை தூக்கி வருகிறார்கள். அங்கு தோண்டி வைக்கப்பட்டிருக்கும் பெயரி குழியில் அதை வைத்துவிட்டு, மற்றொரு உடலை எடுத்து வந்து அதேக் குழியில் போடுகிறார்கள். இவ்வாறு சுமார் எட்டு உடல்களை குழிக்குள் போடுகிறார்கள். 

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பொது மக்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT