இந்தியா

லடாக் பயணம்: சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் நலம் விசாரித்தார் மோடி

ANI

லடாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

லடாக் எல்லையான் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதி இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில், லடாக் பகுதியில் ராணுவ நிலைகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளுக்கான தலைமை தளபதிமற்றும் ராணுவத் தலைமைத் தளபதிகளுடன்  இன்று லடாக் பகுதிக்கு வருகை தந்தார்.

அப்போது, லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT