இந்தியா

தில்லியில் புதிதாக 1,246 பேருக்கு கரோனா: 40 பேர் பலி

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,240 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தில்லியில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,246 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,13,740 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,411 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 91,312 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 19,017 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிகபட்சமாக 3,947 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT