இந்தியா

இன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆடி மாதம் முதல் தேதியான ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகியவற்றுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். வைணவ சம்பிரதாயப்படி எம்பெருமான் வசிக்கும் கோயிலையும் ஓா் ஆழ்வாராகக் கருதுவது மரபு. எனவே, கோயிலைத் தூய்மைப்படுத்தும் திருப்பணியை ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ என்று குறிப்பிடுகின்றனா்.

அதன்படி வரும் 16ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் அதற்கு முன் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 13) கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளது. இத்திருப்பணியில் அா்ச்சகா்கள், கோயில் ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் ஈடுபடுவா்.

இதையொட்டி பெருமாள் தரிசனம் சில மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட உள்ளது. சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்ற பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT