முகப்பு
இந்தியா

ஆகஸ்ட் 1-ல் அரசு பங்களாவை காலி செய்கிறார் பிரியங்கா காந்தி

ஆகஸ்ட் 1-ம் தேதி அரசு பங்களாவை காலி செய்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக அரசு பங்களாவை காலி செய்ய கால அவகாசம் கேட்டிருப்பதாக வந்த செய்திகளை பிரியங்கா மறுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:


புது தில்லி: ஆகஸ்ட் 1-ம் தேதி அரசு பங்களாவை காலி செய்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக அரசு பங்களாவை காலி செய்ய கால அவகாசம் கேட்டிருப்பதாக வந்த செய்திகளை பிரியங்கா மறுத்துள்ளார்.

புது தில்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தங்கியிருக்கும் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், பங்களாவை காலி செய்ய கூடுதல் நேரம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்திருக்கும் பிரியங்கா, நான் அதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை. ஆகஸ்ட் 1ம் தேதி பங்களாவை காலி செய்கிறேன் என்று சுட்டுரை மூலம் பதிலளித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.