இந்தியா

சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்?

ANI


ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்படும் சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். 

ஜெய்ப்பூரில் தனியார் சொகுசு விடுதியில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கட்சிக்கு ஆதரவு தரும் 102 எம்எல்ஏக்கள் பங்கேற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வருக்கு எதிராக செயல்படும் சச்சின் பைலட்டை, கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்காத நிலையில், அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கும் வகையில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. சச்சின் பைலட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
 

இந்த நிலையில், ராஜஸ்தான் ஆளுநரை முதல்வர் அசோக் கெலாட் சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT