இந்தியா

மகாராஷ்டிரத்தில் 7,975 பேருக்கு கரோனா: மேலும் 233 பேர் பலி

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 7,975 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா நிலவரம் பற்றிய அந்த மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 7,975 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,75,640 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 233 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம் இன்று 3,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,52,613 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு குணமடைவோர் விகிதம் 55.37 சதவிகிதமாக உள்ளது.

தாராவி:

தாராவியில் புதிதாக 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,415 ஆக உயர்ந்துள்ளது. 2,067 பேர் குணமடைந்ததையடுத்து, 99 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு தாராவியின் பாதிப்பு இன்று 20-ஐத் தாண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமராவதி!

காத்திருக்கும் சுவாரஸ்யம்... சிஎஸ்கே, ஆர்சிபி ‘பிளே-ஆஃப்’ செல்வதற்கான வழி என்ன?

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

SCROLL FOR NEXT